Search This Blog

Monday 24 July 2023

மாணவர்களுக்கு வாசிப்பு பழக்கத்தை இப்படியும் வசப்படுத்தலாம்!

 மாணவர்களுக்கு வாசிப்பு பழக்கத்தை இப்படியும் வசப்படுத்தலாம்!

https://kalviworldnanba.blogspot.com/2023/07/PSLV%20C56%20ROCKET%20LAUNCH%20JULY%2030%20kalvi.html

படிப்பு என்றவுடன் பாடப் புத்தகங்கள்தான் மாணவர்களுக்கு நினைவில் வரும். ஆனால் அவற்றைத் தாண்டியும் படிக்க வேண்டியவை ஏராளம் இருக்கின்றன. மற்ற புத்தகங்களை வாசிப்பது என்பது அவர்களுக்கு கூடுதலான பலத்தைத் தரும். உங்களின் பிள்ளைகளுக்கு அவர்களுக்கு வாசிக்கும் பழக்கத்தை முதலில் ஏற்படுத்துங்கள். குழந்தைகளின் மூளை 6 முதல் 10 வயதுக்குள் வேகமான வளர்ச்சி அடையும் பருவம். அந்த வயதில் அவர்கள் பழகும் எந்த ஒரு செயலையும் அவர்களால் எளிதில் கற்றுக்கொள்ள முடியும். எனவே வாசிக்கும் பழக்கத்தை அவர்களின் அன்றாடப் பணியில் ஒன்றாக மாற்ற, பெற்றோர்கள் செய்ய வேண்டிய அடிப்படையான விஷயங்கள் பற்றி நூலகர் சுப்பிரமணியன் தரும் அடிப்படையான தகவல்கள். 


குழந்தைகள் பொதுவாக விளையாட்டில் ஆர்வமுடையவர்களாக இருப்பார்கள், அவர்களுக்கு ஒரே நாளில் வாசிப்பு பழக்கத்தை ஏற்படுத்தி விட முடியாது. அவர்களின் கவனத்தை சிறிது சிறிதாக வாசிப்பில் கொண்டு வர முயற்சி செய்யவேண்டும்.


முதலில் படங்கள், பாடல்கள், பெரிய எழுத்துக்கள் உடைய புத்தங்களை வாங்கி கொடுத்து, அதில் இருக்கும் அடிப்படையான தகவல்களை, கதைகளை வாசிக்க சொல்லலாம்.


குழந்தைகளுக்கு வாங்கி கொடுக்கும் புத்தங்களை கொஞ்சம் வித்தியாசமாக, வண்ணத் துணியில் வடிவமைக்கப்பட்ட புத்தகம், அட்டையில் வடிவமைக்கப்பட்டது, அனிமேஷன் புத்தங்கள் என பல்வேறு வடிவங்களில் வாங்கி கொடுத்து அவர்களை வியப்புக்குள்ளாக்கினாலே அவர்கள் அந்தப் புத்தகத்தை படிக்க ஆரம்பித்து விடுவார்கள்.


உங்கள் குழந்தையின் வயதுக்கு ஏற்ற புத்தகங்களை வீட்டில் வாங்கி வைப்பது அவசியம். குழந்தையின் பிறந்தநாள், அவர்களின் சிறந்த செயலுக்கு பாரட்டு, போன்ற சூழலில் அவர்களுக்கு புத்தகங்களையே பரிசாக கொடுங்கள். அந்தப் புத்தகத்தை வாசிக்க சொல்லி அவர்கள் கூறும் தகவலைப் பொறுமையாக கேட்டு அவர்களை ஊக்கப்படுத்துங்கள்.



வீட்டில் இருக்கும் பெரியவர்கள் புத்தகங்கள் அல்லது பேப்பர் படிக்கும்போது அந்த புத்தகத்தை பற்றி குழந்தைகளிடம் பேச வேண்டும், அதில் இருக்கும் படங்களைப் பார்க்கச் சொல்ல வேண்டும் அல்லது புத்தகத்தில் உள்ள பாதி கதையையோ, தகவலையோ அவர்களை ஈர்க்கும் விதமாக கூறிய பின்னர் மீதம் இருக்கும் தகவலை நீயே படித்து தெரிந்துகொள் எனக் கூறுங்கள்.


குழந்தைகள் தினமும் அவர்கள் ஒரு கதை மற்றவர்களுக்கு சொல்லும் பழக்கத்தை உருவாக்குங்கள். மேலும் அவர்கள் படித்த புத்தகத்தின் முடிவை மாற்றி எழுத சொல்லிப் பாராட்டலாம் அல்லது ஆர்வம் தரும் வகையில் விமர்சிக்கலாம்.


உங்கள் பகுதியில் இருக்கும் நூலககத்தில் அவர்களை உறுப்பினர் ஆக்கி, தினமும் ஒரு மணிநேரமாவது நூலகம் செல்வதை அவர்களுக்குப் பழக்கப்படுத்துங்கள்.


குழந்தைகளுக்கு அகல வடிவிலான புத்தகங்களை வாங்கி கொடுப்பதை தவிர்த்து, அவர்கள் எளிதில் கையாளக்கூடிய வகையில் நீள வடிவிலான புத்தகங்களை வாங்கி கொடுக்கலாம்.


குழந்தைகளுக்கு பெட் டைம் கதைகள் சொல்லும்போது கூட கதைப் புத்தகத்தை உங்கள் கையில் வைத்துக்கொண்டு அதில் வரும் படங்களை அவர்கள் பார்க்கும்படி செய்யலாம்.இதனால் வாசிப்புத் தன்மை அதிகரிப்பதுடன் அவர்களின் கற்பனைத்திறனும் வளரும்.


சிடியுடன் கூடிய கதைப் புத்தகங்கள் வாங்கிக் கொடுத்து, முதலில் புத்தகத்தை படிக்கச் சொல்லுங்கள். பின் சிடியைப் பார்க்க சொல்லுங்கள். இதனால் அவர்களுக்கு புரிதல் தன்மையும் அதிகரிக்கும்.

                                             -சு.சூர்யா கோமதி



No comments:

Post a Comment

இப்படிக்கு வயிறு

புத்தகம்: இப்படிக்கு வயிறு  SEE FOR ALL UPDATE JOIN NOW!-CLICK HERE  வயிறு, தன் வரலாறு கூறுதல்! வி ரும்பியதைச் சாப்பிடுகிறோம். வேண்டிய அளவுக...