காட்டுக்குட்டி - மலர்வதி
'காத்திருந்த கருப்பாயி' என்ற புதினத்தின் வழியாக 2008-ல் இலக்கிய உலகில் முகம் காட்டியவர். இவரது துவக்ககால எழுத்துகள் மேடை நாடகங்களாவே வெளிப்பட்டன. தொடர்ந்து இவர் எழுதிய 'தூப்புக்காரி' என்ற புதினம் 2012-ம் ஆண்டிற்கான சாகித்திய அகாதெமியின் 'யுவ புரஸ்கார்' விருதைப் பெற்றது. விளிம்பு நிலை, கடைநிலை, அடித்தட்டு மக்கள் என்று உலகம் கண்டுகொள்ள மறந்தவர்களை தனது இலக்கியத்தின் மையமாகக்கொண்டு எழுதுபவர். முழுவதும் இலக்கிய களத்தில் பயணித்துக்கொண்டிருப்பவர். குமுதம் குழுமத்தின் இலக்கிய பணியாளராகவும் செயல்பட்டுக்கொண்டிருக்கிறார்.
No comments:
Post a Comment