Search This Blog

Sunday 30 July 2023

7 செயற்கை கோள்களுடன் பி.எஸ்.எல்.வி.சி 56 (PSLV C56) ராக்கெட் இன்று விண்ணில் பாய்கிறது

 செயற்கை கோள்களுடன் பி.எஸ்.எல்.வி.சி 56 (PSLV C56) ராக்கெட் இன்று விண்ணில் பாய்கிறது


PSLV C56 ROCKET LAUNCH JULY 30

சென்னை, ஜூலை.30- ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து 7 செயற்கை கோளை சுமந்தபடி பி.எஸ்.எல்.வி. சி-56 ராக் கெட் இன்று (ஞாயிற்றுக் கிழமை) காலை 6.30 மணிக்கு விண்ணில் பாய்கிறது.

பி.எஸ்.எல்.வி. சி-56 ராக்கெட்:

ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரி கோட்டாவில் உள்ள இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிலையத்தின் கட்டுப்பாட்டில் உள்ள சதீஷ் தவான் விண் வெளி ஆய்வு மையத்தில் உள்ள 1-வது-ராக்கெட் ஏவுத ளத்தில் இருந்து பி.எஸ்.எல். வி. சி-56 ராக்கெட் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 6.30. மணிக்கு விண்ணில் ஏவப்படுகிறது.

இதற்கான இறுதிகட்ட பணியாக 25½ மணி நேர கவுண்ட்டவுன் நேற்று காலை 5.30 மணிக்கு தொடங்கியது.

சிங்கப்பூர் செயற்கை கோள்:

இந்த ராக்கெட்டில் சிங்கப்பூர் நாட்டுக்கு சொந்தமான 360 கிலோ எடை கொண்ட 'டிஎஸ்-சாட்' என்ற பிரதான செயற்கை கோள் உள்பட மொத்தம் 7 செயற்கை கோள்கள் விண்ணில் செலுத்தப்படுகின்றன. 

இந்த 'டிஎஸ்-சாட்' செயற்கைகோள்டி.எஸ்.டி.ஏ. (சிங்கப்பூர் அரசு) மற்றும் எஸ். டி., என்ஜினீயரிங் இடையேயான கூட்டாண்மையின் கீழ். உருவாக்கப்பட்டது.

துல்லியமான படங்களை வழங்கும்

'இஸ்ரேல் ஏரோஸ்பேஸ் இண்டஸ்ட்ரீஸ்' (ஐ.ஏ.ஐ) உருவாக்கிய செயற்கை துளை ரேடார் கருவியைகொண்டுள்ள இந்த செயற்கை கோள் அனைத்து வானிலை தகவல்களையும், துல்லியமான படங்களையும் வழங்கும் திறன் கொண்டதாகும்.

இந்த செயற்கை கோள் பூமியில் இருந்து 5 டிகிரி சாய்வில் 535 கி.மீ. உயரத்தில் பூமத்திய ரேகை சுற்றுப்பாதையில் நிலை நிறுத்தப்பட  உள்ளது என்று இஸ்ரேலிய விஞ்ஞானிகள் கூறினர்.



No comments:

Post a Comment

இப்படிக்கு வயிறு

புத்தகம்: இப்படிக்கு வயிறு  SEE FOR ALL UPDATE JOIN NOW!-CLICK HERE  வயிறு, தன் வரலாறு கூறுதல்! வி ரும்பியதைச் சாப்பிடுகிறோம். வேண்டிய அளவுக...