Search This Blog

Sunday 30 July 2023

சீர் இலக்கணம்

 சீர் இலக்கணம்


எழுத்து, அசை ஆகியவற்றை அடுத்து, செய்யுள் உறுப்புகளுள் மூன்றாவதாக இருப்பது சீர். இது அசைகள் சேர்ந்து அமையும்  உறுப்பாகும். தனித்தனிச் சொல்போன்று செய்யுளில் காணப்படும் உறுப்புத்தான் சீர் என்பது.


கற்றதனால் ஆய பயன் என்கொல்

வாலறிவன்நற்றாள் தொழாஅர் எனின்.


இத்திருக்குறளில் முதலடியில் நான்கு சீர்களும், அடுத்த

அடியில் மூன்று சீர்களும் உள்ளன. பொதுவாக எல்லாச்

செய்யுள்களிலும் சீர்கள் ஒவ்வொன்றும் இடம் விட்டுத் தனித் தனிச்

சொற்கள் போல அமைக்கப்பட்டிருக்கும். ஒரு சீரில் அசை

இரண்டோ அல்லது மூன்றோ பொதுவாக இடம் பெற்றிருக்கும்.

ஓர் அசை மட்டுமே அமைந்த சீர்களும் உண்டு. நான்கு

அசைகளையுடைய சீர்களும் உண்டு. இருப்பினும் இத்தகைய நான்கு

சீர்கள் அருகியே (எங்கோ ஓரிரு இடங்களில் மட்டும்)

செய்யுள்களில் காணப்படும்.


சீர் வகைகள்

 செய்யுள்களில் வரும் சீர்கள் ஒன்று தொடக்கம் நான்கு வரும்படியான அசைகளின் சேர்க்கையால் உருவாகின்றன. இவை,


  1. ஓரசைச்சீர்
  2. ஈரசைச்சீர்
  3. மூவசைச்சீர்
  4. நாலசைச்சீர்


எனக் குறிப்பிடப்படுகின்றன. இந்த நான்கு வகையான சீர்களும் வேறு பெயர்களினால் குறிப்பிடப்படுவதும் உண்டு. அவற்றைக் கீழேயுள்ள அட்டவணையில் காணலாம்.



 மேற்சொன்ன நால்வகையான சீர்களும், அவற்றில் இடம்பெறும் அசை வகைகள், அவை இடம்பெறும் ஒழுங்கு என்பவற்றுக்கு ஏற்பப் பல்வேறு வகைகளாக அமைகின்றன. ஓரசைச் சீர்கள் இரண்டு விதமாகவும், ஈரசைச் சீர்கள் நான்கு விதமாகவும், மூவசைச் சீர்கள் எட்டு விதமாகவும், நாலசைச் சீர் 16 விதமாகவும் அமைகின்றன. இவற்றை ஞாபகத்தில் வைத்திருப்பதை இலகுவாக்கவும், குறிப்பிட்டுச் சொல்வதற்கும் எழுதுவதற்கும் வசதியாக இருப்பதற்காகவும், குறிப்பிட்ட சில சொற்களை யாப்பிலக்கண நூல்கள் பயன்படுத்துகின்றன. இவை வாய்பாடுகள் எனப்படுகின்றன. மேற்சொன்ன 30 விதமாக ஒழுங்கில் அமையும் சீர்களையும், அவற்றுக்கான வாய்பாடுகளையும் கீழ்வரும் அட்டவணை காட்டுகின்றது. இதில் இரண்டாம் நிரலில் (Column) சீர்களில் நேரசை, நிரையசைகள் அமைந்திருக்கும் ஒழுங்கும், மூன்றாம் நிரலில் சீர்களுக்குரிய வாய்பாடுகளும், நாலாம் நிரலில் விளக்கம் கருதி அசைபிரித்து எழுதப்பட்டுள்ள வாய்பாடுகளையும் காண்க.


ஓரசைச்சீர்:

Kalviworldnanba.blogspot.com

ஈரசைச் சீர்:

Kalviworldnanba.blogspot.com

மூவசைச்சீர்:


நாலசைச்சீர்:



செய்யுள்களில் பெரும்பாலும் ஈரசை, மூவசைச்சீர்களே வருகின்றன. யாப்பிலக்கண விதிகளுக்கு அமைய, வெண்பாக்களின் இறுதிச் சீராக ஓரசைச்சீர் வரும். வேறிடங்களில் மிக மிக அரிதாகவே ஓரசைச்சீர்கள் காணப்படுகின்றன. இதுபோலவே நாலசைச் சீர்களும் குறைந்த அளவிலேயே பாக்களில் வருகின்றன. மூவசைச்சீரில் நேர் அசையை இறுதியாகக் கொண்டு முடிபவை காய்ச்சீர் எனப்படும்.

No comments:

Post a Comment

இப்படிக்கு வயிறு

புத்தகம்: இப்படிக்கு வயிறு  SEE FOR ALL UPDATE JOIN NOW!-CLICK HERE  வயிறு, தன் வரலாறு கூறுதல்! வி ரும்பியதைச் சாப்பிடுகிறோம். வேண்டிய அளவுக...