இனி புதிய பற்களை முளைக்க வைக்கலாம்
குழந்தைகளாக இருக்கும்போது பால்பற்கள் விழுந்து, நிரந்தரப் பற்கள் வளரும். நிரந்தரப் பற்கள் விழுந்துவிட்டாலோ, அவை திரும்ப முளைப் பதில்லை. ஆனால், சுறாக்களுக்குச் சில வாரங்களுக்கு ஒரு முறை, புதிய பற்கள் வளர்ந்து கொண்டே இருக்கும். முதலைகளுக்கும் அவற்றின் வாழ்நாள் முழுதும் ஆயிரக்கணக்கான பற்கள் முளைத்துக் கொண்டே இருக்கும்.
இவற்றை அடிப்படையாக கொண்டு, விழுந்த பற்களைத் திரும்ப வளர வைக்கும் வழி முறையை விஞ்ஞானிகள் ஆராய்ந்து வந்தனர்.
'போன் மார்போ ஜெனிக் புரோட்டீன்' எனும் ஒரு வகை புரதத்தைத் தூண்டுவதன் வாயிலாக, பல் வளர்ச்சியை உருவாக்கலாம் என்று கண்டறிந்துள்ளனர்.
எலிகளில் நடத்தப்பட்ட சோதனை வெற்றி அடைந்ததை அடுத்து, 2024ம் ஆண்டில் டூத் ஏஜனிசிஸ்' எனும் மரபணு குறைப்பாட்டினால் ஏற்படும் பல் வளர்ச்சியின்மையால் அவதிப் படுவோரிடம் சோதனை நடத்தப்பட உள்ளனர்.
தற்போது இது குறித்து ஆராய்ந்து வரும் ஜப்பான் நாட்டின் ஒசாகா மருத்துவ ஆய்வு மையத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள், இந்தப் புதிய சிகிச்சை முறை 2030ம் ஆண்டிற்குள் முழு வடிவம் பெறும் என்கின்றனர்.
FOLLOW MY TELEGRAM PAGE-GET MORE KNOWLEDGE ....!
No comments:
Post a Comment