ஒரு நிமிடம் தா.... தமிழ் புத்தகம்
FOLLOW THE TELEGRAM GROUP
ஒரு நிமிடம் தா.... எனும் தமிழ் புத்தகம் திரு இந்துமதியால் எழுதப்பட்ட நாவல் ஆகும் இதை பதிவிறக்கம் செய்ய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க
ALL QUESTION PAPERS ANSWER SHEET,FORMS,SCIENCE INTERESTING FACTS IN TAMIL COMPETITIVE EXAMS ARE HELPFUL USE AND GET KNOWLEDGE....
ஒரு நிமிடம் தா.... தமிழ் புத்தகம்
ஒரு நிமிடம் தா.... எனும் தமிழ் புத்தகம் திரு இந்துமதியால் எழுதப்பட்ட நாவல் ஆகும் இதை பதிவிறக்கம் செய்ய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க
GENERAL TAMIL (பொது தமிழ்) TNPSC GK QUESTION AND ANSWER(2)
GENERAL TAMIL (பொது தமிழ்) TNPSC GK QUESTION AND ANSWER(1)
பொதுத் தமிழ் TNPSC பொது அறிவு வினா விடைகள் இடம்பெற்றுள்ள PDF கோப்பு கீழே உள்ள லிங்கில் இணைக்கப்பட்டுள்ளது
FOR DOWNLOAD THE PDF CLICK HERE NOW
1.🎯GENERAL TAMIL (பொது தமிழ்) TNPSC GK QUESTION AND ANSWER -2 (CLICK HERE🪀🎯)
டிப்பிங் பாய்ண்ட்'- THE DIPPING POINT FULL BOOK TAMIL DOWNLOAD
திருப்புமுனை நிகழ்வுகள்!
நீண்ட நாட்களாக சந்தையில் சக்கைபோடு போட்டுக்கொண்டிருக்கும் ஒரு பொருள் ஏதோ ஒரு தருணத்தில் மவுசு குறைந்து விற்பனையில் அதள பாதாளத்துக்குப் போய்விடுவது உண்டு. திடீரென்று அதே பொருளுக்கு மார்க்கெட்டில் 'மறுவாழ்வு’ கிடைக்கும். விற்பனை உச்சத்தைத் தொடும். இது எப்படி சாத்தியமாகிறது?
கொலைகளும் கொள்ளைகளும் அன்றாட சம்பவங்களாகி, நாளுக்கு நாள் எண்ணிக்கையில் அவை அதிகமாகி ஊரே பயந்து நடுங்கும் பதற்றமான சூழல் நிலவும். திடீரென்று குற்றங்களின் எண்ணிக்கை குறைகிறது. மக்கள் பயமின்றி ஊரில் நடமாடுகிறார்கள். இந்த மாற்றத்துக்கு உண்மையில் என்ன காரணம்?
இதுமாதிரிதான் ஒரு புத்தகம் ஒரே இரவில் 'பெஸ்ட் செல்லர்' வரிசையில் சேர்ந்துவிடுகிறது. திடீரென்று ஒருவர் காய்ச்சலால் பாதிக்கப்பட, தொற்றுநோய் போல இது மற்றவர்களுக்கும் அடுத்தடுத்துப் பரவிவிடுகிறது.
பிள்ளையார் பால் குடித்தது... பெண்கள் திடீரெனப் பச்சைப் புடவைகளை அணிந்தது... ஒரு வங்கி திடீரென திவால் ஆனது... இப்படிக் காட்டுத் தீ போல, திடீரென ஒரு நல்ல விஷயமோ ஒரு வதந்தியோ அதி விரைவாகப் பரவி, ஒரு மாற்றத்தை ஏற்படுத்துவதைப் பார்க்கிறோம்.
இந்த மாற்றங்களுக்கெல்லாம் ஆரம்பப் புள்ளி எது? டிப்பிங் பாயின்ட் என்று சொல்லப்படும் திருப்புமுனை ஏற்படுவதற்கு அடிப்படை என்ன?
இந்த நூலில் பல்வேறு நிஜ சம்பவங்களை உதாரணங்களாகக் கொண்டு விளக்கியிருக்கிறார் மால்கம்" க்ளேட்வெல். டிப்பிங் பாயின்ட் காரணங்களை ஒரு மர்ம நாவலுக்கே உரித்தான விறுவிறுப்புடன் விவரிக்கிறார்.
*THE TIPPING POINT' என்ற தலைப்பு கொண்ட ஆங்கில நூலை அதன் சுவையும் மணமும் குறையாமல் தமிழாக்கம் செய்திருக்கிறார் சித்தார்த்தன் சுந்தரம்.
படித்து ரசியுங்கள்!
-ஆசிரியர்
FOR DOWNLOAD THE FULL BOOK IN TAMIL - CLICK HERE
சீர் இலக்கணம்
எழுத்து, அசை ஆகியவற்றை அடுத்து, செய்யுள் உறுப்புகளுள் மூன்றாவதாக இருப்பது சீர். இது அசைகள் சேர்ந்து அமையும் உறுப்பாகும். தனித்தனிச் சொல்போன்று செய்யுளில் காணப்படும் உறுப்புத்தான் சீர் என்பது.
கற்றதனால் ஆய பயன் என்கொல்
வாலறிவன்நற்றாள் தொழாஅர் எனின்.
இத்திருக்குறளில் முதலடியில் நான்கு சீர்களும், அடுத்த
அடியில் மூன்று சீர்களும் உள்ளன. பொதுவாக எல்லாச்
செய்யுள்களிலும் சீர்கள் ஒவ்வொன்றும் இடம் விட்டுத் தனித் தனிச்
சொற்கள் போல அமைக்கப்பட்டிருக்கும். ஒரு சீரில் அசை
இரண்டோ அல்லது மூன்றோ பொதுவாக இடம் பெற்றிருக்கும்.
ஓர் அசை மட்டுமே அமைந்த சீர்களும் உண்டு. நான்கு
அசைகளையுடைய சீர்களும் உண்டு. இருப்பினும் இத்தகைய நான்கு
சீர்கள் அருகியே (எங்கோ ஓரிரு இடங்களில் மட்டும்)
செய்யுள்களில் காணப்படும்.
சீர் வகைகள்
செய்யுள்களில் வரும் சீர்கள் ஒன்று தொடக்கம் நான்கு வரும்படியான அசைகளின் சேர்க்கையால் உருவாகின்றன. இவை,
எனக் குறிப்பிடப்படுகின்றன. இந்த நான்கு வகையான சீர்களும் வேறு பெயர்களினால் குறிப்பிடப்படுவதும் உண்டு. அவற்றைக் கீழேயுள்ள அட்டவணையில் காணலாம்.
மேற்சொன்ன நால்வகையான சீர்களும், அவற்றில் இடம்பெறும் அசை வகைகள், அவை இடம்பெறும் ஒழுங்கு என்பவற்றுக்கு ஏற்பப் பல்வேறு வகைகளாக அமைகின்றன. ஓரசைச் சீர்கள் இரண்டு விதமாகவும், ஈரசைச் சீர்கள் நான்கு விதமாகவும், மூவசைச் சீர்கள் எட்டு விதமாகவும், நாலசைச் சீர் 16 விதமாகவும் அமைகின்றன. இவற்றை ஞாபகத்தில் வைத்திருப்பதை இலகுவாக்கவும், குறிப்பிட்டுச் சொல்வதற்கும் எழுதுவதற்கும் வசதியாக இருப்பதற்காகவும், குறிப்பிட்ட சில சொற்களை யாப்பிலக்கண நூல்கள் பயன்படுத்துகின்றன. இவை வாய்பாடுகள் எனப்படுகின்றன. மேற்சொன்ன 30 விதமாக ஒழுங்கில் அமையும் சீர்களையும், அவற்றுக்கான வாய்பாடுகளையும் கீழ்வரும் அட்டவணை காட்டுகின்றது. இதில் இரண்டாம் நிரலில் (Column) சீர்களில் நேரசை, நிரையசைகள் அமைந்திருக்கும் ஒழுங்கும், மூன்றாம் நிரலில் சீர்களுக்குரிய வாய்பாடுகளும், நாலாம் நிரலில் விளக்கம் கருதி அசைபிரித்து எழுதப்பட்டுள்ள வாய்பாடுகளையும் காண்க.
செய்யுள்களில் பெரும்பாலும் ஈரசை, மூவசைச்சீர்களே வருகின்றன. யாப்பிலக்கண விதிகளுக்கு அமைய, வெண்பாக்களின் இறுதிச் சீராக ஓரசைச்சீர் வரும். வேறிடங்களில் மிக மிக அரிதாகவே ஓரசைச்சீர்கள் காணப்படுகின்றன. இதுபோலவே நாலசைச் சீர்களும் குறைந்த அளவிலேயே பாக்களில் வருகின்றன. மூவசைச்சீரில் நேர் அசையை இறுதியாகக் கொண்டு முடிபவை காய்ச்சீர் எனப்படும்.
முன்னுரை:
காப்பியம் என்பது இலக்கிய வடிவங்களில் ஒன்றாகும். சிலப்பதிகாரம்⸴ மணிமேகலை⸴ குண்டலகேசி⸴ வளையாபதி⸴ சீவக சிந்தாமணி என்னும் காப்பியங்கள் ஒருங்கே ஐம்பெருங் காப்பியங்கள் என அறியப்படுகின்றன.
இவற்றுள் சிலப்பதிகாரமும்⸴ மணிமேகலையும் சங்க மருவிய காலத்தில் தோன்றிய காப்பியங்களாக ஏனையவை சோழர் காலத்தில் தோன்றியவையாகும்.
தமிழில் தோன்றிய காப்பியங்களயாக சிலப்பதிகாரம் மற்றும் மணிமேகலை காணப்பட ஏனையவை வேற்று மொழிகளைத் தழுவிய தமிழாக்கங்களாகவுள்ளன. இக்கட்டுரையில் ஐம்பெரும் காப்பியங்கள் பற்றி காண்போம்.
ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்றாகிய சிலப்பதிகாரம் ஆனது சேர நாட்டவரான இளங்கோவடிகளினால் கி.பி இரண்டாம் நூற்றாண்டில் எழுதப்பட்டது.
மணிமேகலை நூலின் ஆசிரியர் சீத்தலைச் சாத்தனார் ஆவார்.
சீவகசிந்தாமணி என்னும் நூலானது திருத்தக்கதேவரினால் எழுதப்பட்டதாகும்.
ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்றான வளையாபதி நூலை எழுதிய ஆசிரியர் பெயர் இன்று வரை அறியப்படவில்லை.
குண்டலகேசி நூலை எழுதிய ஆசிரியர் நாதகுத்தனார் ஆவார்.
சிலப்பதிகாரத்தில் சிலம்பு என்பது மகளிர் அணியும் காலணியைக் குறிக்கின்றது.
மணிமேகலை என்பது மகளிர் இடுப்பில் அணியும் அணி ஆகும்.
குண்டலகேசியில் குண்டலம் என்பது பெண்கள் அணியும் காது வளையம் ஆகும்.
வளையாபதி வளையல் அணிந்த பெண் வளையாபதி ஆகும்.
சீவக சிந்தாமணியில் சிந்தாமணி என்பது அரசன் முடியில் பதிக்கப்படும் மணிக் கல்லாகும்.
சிலப்பதிகாரம் மற்றும் மணிமேகலை ஆகிய இரண்டு காப்பியங்களும் இரட்டை காப்பியங்கள் என அழைக்கப்படுகின்றன. இவ்விரு காப்பியங்களும் தமிழ்நாட்டைக் கதைக் களமாக கொண்டவையாகும்.
சிலப்பதிகாரமானது கோவலன் எனும் வணிகன் மற்றும் அவன் மனைவி கண்ணகி ஆகியோரது கதையைக் கூறுவதாகும். இக் காப்பியத்தில் கோவலனுடன் தொடர்பு கொள்ளும் மாதவி இன்னோர் கதாபாத்திரமாகும்
மணிமேகலையின் கதைக்களன்⸴ கதைமாந்தர்⸴ கதை நடக்கும் காலம் ஆகியவை சிலப்பதிகாரத்தை ஒத்ததாகும். இதனால் இவை இரண்டும் இரட்டைக் காப்பியங்கள் எனப்படுகின்றன.
சிலப்பதிகாரத்தில் வரும் மாதவியின் மகள் மணிமேகலை ஆகும். இவளே மணிமேகலைக் காப்பியத்தின் நாயகியாகும்.
மணிமேகலை புத்தத் துறவியாகி பசிப்பிணி போக்குவதையே தன் கடமையாகக் கொண்டு வாழ்ந்ததால் மறைவிற்குப் பின் தெய்வமாய்ப் போற்றப்பட்டாள்.
தமிழில் தோன்றிய முதல் காப்பியம் என்ற சிறப்பை சிலப்பதிகாரம் பெறுகின்றது. பெண் காப்பியத் தலைவி ஆகும். மன்னருக்கு நிகராக வணிகர் கருதப்படுதலை சிலப்பதிகாரத்தில் காணலாம்.
மணிமேகலை காப்பியமானது உணவிடும் உன்னதப் பணியினை கூறுகின்றது. சீவகசிந்தாமணியானது ஓர் மண நூலாகும்.
வளையாபதி தமிழன்னையின் வளையல் ஆகும். குண்டலகேசியின் கதைப் போக்கும் மணிமேகலை காப்பியத்தினை ஒத்ததாகவே உள்ளது.
ஐம்பெரும் காப்பியங்களும் தமிழ் இலக்கியத்தின் சிறப்பான சின்னங்கள் ஆகும். இவை அறக் கருத்துக்களைப் போதித்து மக்களை நல்வழிப்படுத்த வழியாக திகழ்கின்றன.
ஐம்பெருங் காப்பியங்கள் கூறும் அறக் கருத்துக்களைப் பின்பற்றி அதன் படி நாமும் வாழ்ந்து வாழ்வில் வளம் பெறுவோமாக.
(JANUARY TO JULY) 2023 THEN CHITTU MAGAZINE - தேன் சிட்டு இதழ்
தேன் சிட்டு இதழ் -THEN CHITTU MAGAZINE 1:https://kalviworldnanba.blogspot.com/2023/07/then-chittu-magazine-1.html
January 2023 - Then chittu Magazine( 1 to 30th):https://kalviworldnanba.blogspot.com/2023/07/Then%20chittu%20nagazine%20January%20kalviworldnanba%20.html
Febraury 2023 - Then chittu Magazine( 1 to 30th):https://kalviworldnanba.blogspot.com/2023/07/Then%20chittu%20Magazine%20February%202023%20kalviworldnanba%20.html
MARCH 2023 THEN CHITTU MAGAZINE-தேன் சிட்டு இதழ் TAMIL (1 to 30th):
June 2023 - Then chittu Magazine ( 1 to 15th )
https://kalviworldnanba.blogspot.com/2023/07/Then%20chittu%20Magazine%20June%202023%201%20to%2015th.html
June 2023 - Then chittu Magazine ( 16 to30th ):
https://kalviworldnanba.blogspot.com/2023/07/then%20chittu%20magazine%20june%2016%20to%2030th%20.html
July 2023 - Then chittu Magazine ( 1 to 15th):https://kalviworldnanba.blogspot.com/2023/07/june-2023-then-chittu-magazine-1-to-15th.html
JULY2023 - தேன் சிட்டு இதழ் -Then chittu Magazine ( 16 to 31th):
https://kalviworldnanba.blogspot.com/2023/07/june-2023-then-chittu-magazine-1-to-15th_01970479393.html
இனி புதிய பற்களை முளைக்க வைக்கலாம்
இவற்றை அடிப்படையாக கொண்டு, விழுந்த பற்களைத் திரும்ப வளர வைக்கும் வழி முறையை விஞ்ஞானிகள் ஆராய்ந்து வந்தனர்.
'போன் மார்போ ஜெனிக் புரோட்டீன்' எனும் ஒரு வகை புரதத்தைத் தூண்டுவதன் வாயிலாக, பல் வளர்ச்சியை உருவாக்கலாம் என்று கண்டறிந்துள்ளனர்.
எலிகளில் நடத்தப்பட்ட சோதனை வெற்றி அடைந்ததை அடுத்து, 2024ம் ஆண்டில் டூத் ஏஜனிசிஸ்' எனும் மரபணு குறைப்பாட்டினால் ஏற்படும் பல் வளர்ச்சியின்மையால் அவதிப் படுவோரிடம் சோதனை நடத்தப்பட உள்ளனர்.
தற்போது இது குறித்து ஆராய்ந்து வரும் ஜப்பான் நாட்டின் ஒசாகா மருத்துவ ஆய்வு மையத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள், இந்தப் புதிய சிகிச்சை முறை 2030ம் ஆண்டிற்குள் முழு வடிவம் பெறும் என்கின்றனர்.
FOLLOW MY TELEGRAM PAGE-GET MORE KNOWLEDGE ....!
PSLV-C56/DS-SAR Mission
செயற்கை கோள்களுடன் பி.எஸ்.எல்.வி.சி 56 (PSLV C56) ராக்கெட் இன்று விண்ணில் பாய்கிறது
பி.எஸ்.எல்.வி. சி-56 ராக்கெட்:
ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரி கோட்டாவில் உள்ள இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிலையத்தின் கட்டுப்பாட்டில் உள்ள சதீஷ் தவான் விண் வெளி ஆய்வு மையத்தில் உள்ள 1-வது-ராக்கெட் ஏவுத ளத்தில் இருந்து பி.எஸ்.எல். வி. சி-56 ராக்கெட் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 6.30. மணிக்கு விண்ணில் ஏவப்படுகிறது.
இதற்கான இறுதிகட்ட பணியாக 25½ மணி நேர கவுண்ட்டவுன் நேற்று காலை 5.30 மணிக்கு தொடங்கியது.
சிங்கப்பூர் செயற்கை கோள்:
இந்த ராக்கெட்டில் சிங்கப்பூர் நாட்டுக்கு சொந்தமான 360 கிலோ எடை கொண்ட 'டிஎஸ்-சாட்' என்ற பிரதான செயற்கை கோள் உள்பட மொத்தம் 7 செயற்கை கோள்கள் விண்ணில் செலுத்தப்படுகின்றன.
இந்த 'டிஎஸ்-சாட்' செயற்கைகோள்டி.எஸ்.டி.ஏ. (சிங்கப்பூர் அரசு) மற்றும் எஸ். டி., என்ஜினீயரிங் இடையேயான கூட்டாண்மையின் கீழ். உருவாக்கப்பட்டது.
துல்லியமான படங்களை வழங்கும்
'இஸ்ரேல் ஏரோஸ்பேஸ் இண்டஸ்ட்ரீஸ்' (ஐ.ஏ.ஐ) உருவாக்கிய செயற்கை துளை ரேடார் கருவியைகொண்டுள்ள இந்த செயற்கை கோள் அனைத்து வானிலை தகவல்களையும், துல்லியமான படங்களையும் வழங்கும் திறன் கொண்டதாகும்.
இந்த செயற்கை கோள் பூமியில் இருந்து 5 டிகிரி சாய்வில் 535 கி.மீ. உயரத்தில் பூமத்திய ரேகை சுற்றுப்பாதையில் நிலை நிறுத்தப்பட உள்ளது என்று இஸ்ரேலிய விஞ்ஞானிகள் கூறினர்.
JUNE (16 to 30) 2023 புது ஊஞ்சள் இதழ்-PUTHU VUNJAL MAGAZINE
மார்ச் 2023 தேன் சிட்டு இதழ் - MARCH 2023 THEN CHITTU MAGAZINE TAMIL
Febraury 2023 - Then chittu Magazine( 1 to 30th)
தேன்சிட்டு | 01-30 பிப்ரவரி 2023 மாதமிருமுறை இதழ் - உலக அறிவுக்குத் தமிழ்ச் சாளரம் - 6 முதல் 9ஆம் வகுப்புகளுக்கான இதழ் - பள்ளிக்கல்வித்துறைக்காக தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் வெளியீடு
January 2023 - Then chittu Magazine( 1 to 30th
June 2023 - Then chittu Magazine( 1 to 15th )
June 2023 - Then chittu Magazine ( 16 to 30th )
தேன்சிட்டு - 16-30 ஜூன் 2023 மாதமிருமுறை இதழ் - உலக அறிவுக்குத் தமிழ்ச் சாளரம் - 6 முதல் 9ஆம் வகுப்புகளுக்கான இதழ் - பள்ளிக்கல்வித்துறைக்காக தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் வெளியீடு
FOR DOWNLOAD THE MAGAZINE-CLICK HERE
FOR FOLLOW MY TELEGRAM PAGE-GET MORE KNOWLEDGE..!
JULY2023 - தேன் சிட்டு இதழ் -Then chittu Magazine ( 16 to 31th )
JULY2023 - தேன் சிட்டு இதழ் -Then chittu Magazine ( 16 to 31th )
FOR DOWNLOAD THE MAGAZINE DOWNLOAD- CLICK HERE
FOLLOW TELEGRAM PAGE .....GET MORE KNOWLEDGE
July 2023 - Then chittu Magazine ( 1 to 15th)
தேன்சிட்டு | 01-15 ஜூலை 2023 மாதமிருமுறை இதழ் - உலக அறிவுக்குத் தமிழ்ச் சாளரம் - 6 முதல் 9ஆம் வகுப்புகளுக்கான இதழ் - பள்ளிக்கல்வித்துறைக்காக தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் வெளியீடு
FOR THE MAGAZINE CLICK TO DOWNLOAD NOW
மாணவர்களுக்கு வாசிப்பு பழக்கத்தை இப்படியும் வசப்படுத்தலாம்!
படிப்பு என்றவுடன் பாடப் புத்தகங்கள்தான் மாணவர்களுக்கு நினைவில் வரும். ஆனால் அவற்றைத் தாண்டியும் படிக்க வேண்டியவை ஏராளம் இருக்கின்றன. மற்ற புத்தகங்களை வாசிப்பது என்பது அவர்களுக்கு கூடுதலான பலத்தைத் தரும். உங்களின் பிள்ளைகளுக்கு அவர்களுக்கு வாசிக்கும் பழக்கத்தை முதலில் ஏற்படுத்துங்கள். குழந்தைகளின் மூளை 6 முதல் 10 வயதுக்குள் வேகமான வளர்ச்சி அடையும் பருவம். அந்த வயதில் அவர்கள் பழகும் எந்த ஒரு செயலையும் அவர்களால் எளிதில் கற்றுக்கொள்ள முடியும். எனவே வாசிக்கும் பழக்கத்தை அவர்களின் அன்றாடப் பணியில் ஒன்றாக மாற்ற, பெற்றோர்கள் செய்ய வேண்டிய அடிப்படையான விஷயங்கள் பற்றி நூலகர் சுப்பிரமணியன் தரும் அடிப்படையான தகவல்கள்.
குழந்தைகள் பொதுவாக விளையாட்டில் ஆர்வமுடையவர்களாக இருப்பார்கள், அவர்களுக்கு ஒரே நாளில் வாசிப்பு பழக்கத்தை ஏற்படுத்தி விட முடியாது. அவர்களின் கவனத்தை சிறிது சிறிதாக வாசிப்பில் கொண்டு வர முயற்சி செய்யவேண்டும்.
முதலில் படங்கள், பாடல்கள், பெரிய எழுத்துக்கள் உடைய புத்தங்களை வாங்கி கொடுத்து, அதில் இருக்கும் அடிப்படையான தகவல்களை, கதைகளை வாசிக்க சொல்லலாம்.
குழந்தைகளுக்கு வாங்கி கொடுக்கும் புத்தங்களை கொஞ்சம் வித்தியாசமாக, வண்ணத் துணியில் வடிவமைக்கப்பட்ட புத்தகம், அட்டையில் வடிவமைக்கப்பட்டது, அனிமேஷன் புத்தங்கள் என பல்வேறு வடிவங்களில் வாங்கி கொடுத்து அவர்களை வியப்புக்குள்ளாக்கினாலே அவர்கள் அந்தப் புத்தகத்தை படிக்க ஆரம்பித்து விடுவார்கள்.
உங்கள் குழந்தையின் வயதுக்கு ஏற்ற புத்தகங்களை வீட்டில் வாங்கி வைப்பது அவசியம். குழந்தையின் பிறந்தநாள், அவர்களின் சிறந்த செயலுக்கு பாரட்டு, போன்ற சூழலில் அவர்களுக்கு புத்தகங்களையே பரிசாக கொடுங்கள். அந்தப் புத்தகத்தை வாசிக்க சொல்லி அவர்கள் கூறும் தகவலைப் பொறுமையாக கேட்டு அவர்களை ஊக்கப்படுத்துங்கள்.
வீட்டில் இருக்கும் பெரியவர்கள் புத்தகங்கள் அல்லது பேப்பர் படிக்கும்போது அந்த புத்தகத்தை பற்றி குழந்தைகளிடம் பேச வேண்டும், அதில் இருக்கும் படங்களைப் பார்க்கச் சொல்ல வேண்டும் அல்லது புத்தகத்தில் உள்ள பாதி கதையையோ, தகவலையோ அவர்களை ஈர்க்கும் விதமாக கூறிய பின்னர் மீதம் இருக்கும் தகவலை நீயே படித்து தெரிந்துகொள் எனக் கூறுங்கள்.
குழந்தைகள் தினமும் அவர்கள் ஒரு கதை மற்றவர்களுக்கு சொல்லும் பழக்கத்தை உருவாக்குங்கள். மேலும் அவர்கள் படித்த புத்தகத்தின் முடிவை மாற்றி எழுத சொல்லிப் பாராட்டலாம் அல்லது ஆர்வம் தரும் வகையில் விமர்சிக்கலாம்.
உங்கள் பகுதியில் இருக்கும் நூலககத்தில் அவர்களை உறுப்பினர் ஆக்கி, தினமும் ஒரு மணிநேரமாவது நூலகம் செல்வதை அவர்களுக்குப் பழக்கப்படுத்துங்கள்.
குழந்தைகளுக்கு அகல வடிவிலான புத்தகங்களை வாங்கி கொடுப்பதை தவிர்த்து, அவர்கள் எளிதில் கையாளக்கூடிய வகையில் நீள வடிவிலான புத்தகங்களை வாங்கி கொடுக்கலாம்.
குழந்தைகளுக்கு பெட் டைம் கதைகள் சொல்லும்போது கூட கதைப் புத்தகத்தை உங்கள் கையில் வைத்துக்கொண்டு அதில் வரும் படங்களை அவர்கள் பார்க்கும்படி செய்யலாம்.இதனால் வாசிப்புத் தன்மை அதிகரிப்பதுடன் அவர்களின் கற்பனைத்திறனும் வளரும்.
சிடியுடன் கூடிய கதைப் புத்தகங்கள் வாங்கிக் கொடுத்து, முதலில் புத்தகத்தை படிக்கச் சொல்லுங்கள். பின் சிடியைப் பார்க்க சொல்லுங்கள். இதனால் அவர்களுக்கு புரிதல் தன்மையும் அதிகரிக்கும்.
-சு.சூர்யா கோமதி
புத்தகம்: இப்படிக்கு வயிறு SEE FOR ALL UPDATE JOIN NOW!-CLICK HERE வயிறு, தன் வரலாறு கூறுதல்! வி ரும்பியதைச் சாப்பிடுகிறோம். வேண்டிய அளவுக...