செய்தித்தாள் படித்தால் மனதில் எளிதில் பதியும் - இன்று காகித தினம்
FOLLOW ON TELEGRAM GET MORE KNOWLEDGE
கடந்த 1940ம் ஆண்டு ஆகஸ்ட் 1ம்தேதி புனேயில் சுதேசி காகித சிறு பணிமனையை அப்போதைய பிரதமர் ஜவகர்லால் நேரு துவக்கி வைத்தார். அந்த நாளை பெருமைப்படுத்தும் வகையில் காகித ஆலைகள் மத்திய அரசுடன் இணைந்து ஆகஸ்ட் 1ம் தேதியன்று தேசிய காகித தினத்தை கொண்டாடுகிறது.
காகிதமானது விரைந்து மட்குவதால், பூமிக்கு தீங்கு ஏற்படாது. மரம், கரும்பு சக்கை போன்றவற்றில் இருந்து காகிதம் தயாரிக்கப்படுவதால், இது விவசாயம் சார்ந்த தொழிலாகவே உள்ளது.
மொபைல், கம்ப்யூட்டரில் வரும். செய்திகள், புத்தகங்களை என்னதான் படித்தாலும் மனதில் அவ்வளவாக பதிவாகாது என ஆய்வில் தெரியவந்துள்ளது.எனவே, மாணவர்கள் தினமும் செய்தித்தாள்கள், புத்தகங்கள் படித்தால் மட்டுமே மனதில் பதிவாகும். அதை தினந்தோறும் செய்ய வேண்டும்.
தொழில்நுட்பம் முன்னேற்றமடைந்து வரும் இந்த கால கட்டத்தில் மாணவர்களிடம் காகிதத்தில் எழுதும் பழக்கம் அதிகரித்துள்ளது.
இந்தியாவில் ஒரு மனிதன், சராசரியாக ஆண்டுக்கு, 15 கிலோ காகிதத்தை பயன்படுத்துவதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இது இன்னும் அதிகரித்து வருகிறது. இதனால் நாட்டில் ஆண்டுக்கு ஆண்டு காகித பயன்பாடு 5 சதவீதம் வரை. அதிகரித்து வருகிறது.
அதிகரித்து வரும் காகித பயன்பாட்டை கருத்தில் கொண்டு மத்திய, மாநில அரசுகள் பயன்பாட்டில் இல்லாத காடுகளை காகித ஆலைகளுக்கு குத்தகைக்கு விடும் பட்சத்தில் காகித உற்பத்தி அதிகரிக்க வாய்ப்புள்ளது.
No comments:
Post a Comment